திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த பச்சமலையான் கோட்டை ஊராட்சியில் பிற கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் ஆர்.விசுவநாதன் தலைமை வகித்தார். நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேன்மொழி முன்னிலை வகித்தார். ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தி யாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவ நாதன், கடந்த தேர்தலில் தேன்மொழி 26 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றிபெற்றார்.
நடைபெற உள்ள தேர்தலில் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றிபெறுவார், என்றார். முன்னாள் அமைச்சரின் இந்தக் கருத்து மூலம் தேன்மொழி எம்.எல்.ஏ. மீண்டும் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப் படுகிறது. நிலக்கோட்டையில் போட்டியிட கட்சியில் பலரும் விருப்பம் தெரிவித்து வரும்நிலையில் மீண்டும் தேன்மொழி போட்டியிடுவது உறுதி என்பது போல் பேசியது கட்சியில் மற்ற நிர்வாகிகள், சீட் கேட்டு முயற்சிப்பவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.