தமிழகம்

புதுச்சேரி மின்திறல் குழுமத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ

செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டம் நிரவி-திருப்பட்டினம் தொகுதி திமுக எம்எல்ஏ, தான் வகித்து வந்த புதுச்சேரி மின் திறல் குழும (பிபிசிஎல்) தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

நிரவி-திருப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏ கீதா ஆனந்தன். திமுவைச் சேர்ந்த இவர், புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்த நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதைத்தொடர்ந்து, நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், தான் வகித்து வந்த புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை காரைக்கால் ஆட்சியரும், மின்திறல் குழும மேலாண் இயக்குநருமான அர்ஜூன்சர்மாவிடம் நேற்று நேரில் வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், அரசால் வழங்கப்பட்ட மின்திறல் குழுமத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மீண்டும் புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றார்.

SCROLL FOR NEXT