தமிழகம்

தமிழக பாதிரியார் கடத்தல்: ஒருவர் கைது

செய்திப்பிரிவு

தலிபான் தீவிரவாதிகளால் தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் கடத்திச் செல்லப் பட்டது தொடர்பாக ஒருவரை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய வெளியு றவுத் துறை வட்டாரத்தில் கூறப்ப டுவதாவது: “பிரேம் குமார் கடத்திச் செல்லப்படுவதற்கு உதவிய ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாக ஆப்கன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆப்கன் அரசுடனும், ஹிராட்டில் உள்ள அதிகாரிகளுடனும் இந்திய தூதர் தொடர்ந்து பேசி வருகிறார். எந்த வகையான நடவடிக்கையை எடுப்பது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் யோசனை தெரிவித்து வருகிறார். அதன்படி செயல்படுகிறோம்.

பிரேம் குமார், இந்திய அரசுக் காக ஆப்கானிஸ்தானில் வேலை செய்து வந்தார் என்பது தவறானது. அவர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில்தான் பணியாற்றி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேம்குமார் பணியாற்றி வந்த ஜே.ஆர்.எஸ். தொண்டு நிறு வனத்தின் சர்வதேச இயக்குநர் பீட்டர் பால்லெய்ஸ் கூறுகையில், “பிரேம் குமார் கடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம். அவரை பாதுகாப்பாக மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்” என்றார்.

பிரேம்குமார் கடத்திச் செல்லப் பட்டது பற்றி, இந்திய, ஆப்கன் அரசு களின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி வருவதாக அமெரிக்க வெளி யுறவுத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT