தமிழகம்

வாக்கெடுப்பு நடத்தாமல் பெரும்பான்மை இழந்ததாக எப்படி அறிவிக்க முடியும்?- பேரவைத் தலைவரின் முடிவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் நாராயணசாமி ஆலோசனை

செய்திப்பிரிவு

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நாராயணசாமி நேற்றுமாலை வெளியிட்டுள்ள ஆடியோபதிவில் கூறியிருப்பதாவது:

நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவையில் உரையாற்றினேன். அந்த நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க உரிமை உண்டா?’ என்று கேள்வி எழுப்பினார். அதைபேரவைத் தலைவர் ஏற்காத காரணத்தால் நாங்கள் எங்களுடைய அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, வெளிநடப்பு செய்தோம்.

அதன்பிறகு நான் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். நான் முன்மொழிந்து பேசிய பிறகு அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

நாங்கள் வெளிநடப்பு செய்தாலும்கூட, ‘முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் மீது வாக்கெடுப்புவிடுகிறேன்’ என்று பேரவைத் தலைவர் அறிவிக்க வேண்டும். ஆளுங்கட்சி யாரும் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியின் எண்ணிக்கையைஎண்ணி, எவ்வளவு பேர் எதிர்த்துவாக்களிக்கிறார்கள் என்று பதிவுசெய்த பிறகே தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தோல்விஅடைவதாக பேரவைத் தலைவர்தீர்ப்பு வழங்குகிறார். வாக்கெடுப்புநடத்தாமல் எப்படி பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று பேரவைத் தலைவர் சொல்ல முடியும்? இதுவொரு சட்டப் பிரச்சினை. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT