11 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணியினருடன் மில்லினியம் கார்டன் கால்பந்து கழக நிர்வாகிகள். 
தமிழகம்

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலியில் பெண்கள் கால்பந்து போட்டி

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்தநாளையொட்டி நெய் வேலியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் ஜெயல லிதா பிறந்தநாளையொட்டி நெய்வேலி மில்லினியம் கார்டன் கழகம்சார்பில் பெண்களுக்கான கால்பந் தாட்டப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 18 முதல் 21-ம் தேதி வரை 11 வயது மற்றும் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கான மில்லினியம் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் சென்னை, பெங்க ளூரு, மதுரை, திருச்சி, சேலம், கன்னியாகுமரி, சிதம்பரம், கடலூர் மற்றும் நெய்வேலி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 அணியினர் பங்கேற்றனர். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வென்ற தஞ்சை யுனைடெட் கால்பந்தாட்டக் கழகத் திற்கு ஜெயலலிதா நினைவுக் கோப்பையை குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் வழங்கினார்.

இதேபோன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் வெற்றி பெற்ற சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக அணிக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் கலையரசி கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக போட்டிகளை குறிஞ்சிப்பாடி அதிமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இப்போட்டி க்கான ஏற்பாடுகளை மில்லினியம் கார்டன் கால்பந்துக் கழக நிர்வாகி ஞானபிரகாசம் செய்தி ருந்தார்.

SCROLL FOR NEXT