மதுரை புறநகர் மாவட்ட திமுக சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். 
தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரை உட்பட 6 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை மாநகர் சார்பில் அண்ணா நகர் அம்பிகா திரையரங்கம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன்,முத்துராமலிங்கம், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ வி.வேலுச்சாமி, பகுதிச் செயலாளர் அக்ரிகணேசன் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

திருமங்கலத்தில் ராஜாஜி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ., தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணி மாறன் தலைமை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலர் சாத்தூர் ராமச் சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவ ட்டச் செயலர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், திமுக நகர்் செயலர் தனபால் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் மணிக்கூண்டு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி., ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேனி பங்களாமேட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணக்குமார், போடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் லட்சுமணன், நகர் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டியில் முருகன் திரையரங்கம் அருகே தெற்கு மாவட்ட திமுக சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகாராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் அரண்மனை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், தீர்மானக் குழு துணைத் தலைவர் சுப.திவாகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இன்பாரகு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உ.திசைவீரன், நகர் செயலாளர்கள் கார்மேகம், பிரவீன்தங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற போராட் டத்துக்கு மாவட்ட திமுக செய லாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, நகர் செயலாளர் துரைஆனந்த், ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிர் அணிச் செயலர் பவானி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT