பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இன்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., மற்றும் திமுகவினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
இதைப்போல் குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட திமுக தலைவர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். குழித்துறை நகர செயலாளர் பொன் ஆசைத்தம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.