தமிழகத்தில் ஆன்ஜியோகிராம் மற்றும் ஆன்ஜியோபிளாஸ்டிக் சிகிச்சையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு இதய சிகிச்சை வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு நவீனஇதய ஆய்வு கூடம் (கேத் லேப்)தொடங்கப்பட்டது.கரோனா காலத்திலும் இந்த சேவை நிறுத்தப்படாமல் ஆன்ஜியோகிராம் மற்றும் ஆன்ஜியோபிளாஸ்டிக் சிகிச்சை முறை நடைபெற்றது.
இதுவரை 5,043 பேருக்கு ஆன்ஜியோகிராம் மற்றும் ஆன்ஜியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் மட்டும் 1,602 பேருக்கு இந்தசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சிகிச்சையில் ஸ்டான்லி மருத்துவமனை தமிழகத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது என்று மருத்துவமனை டீன் பாலாஜி தெரிவித்தார்.