தமிழகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நல்லாட்சியை வழங்கி வருகிறார் என பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமின்போது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில் உள்ள 36 வார்டுகளில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிமானம் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றால் ஏற்பட்ட அதிருப்தி இன்னும் மக்களிடையே உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக முதல்வர் பழனிசாமி நல்லாட்சி வழங்கி வருகிறார். ஆனால் மு.க. ஸ்டாலின் குற்ற ஆராய்ச்சி நிபுணர்போல, எப்போதும் அதிமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார். இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். ஸ்டாலின் சொல்லி திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் முதல்வர் இல்லை. யாருடைய பதவியைப் பறித்துக்கொண்டும் முதல்வர் ஆட்சிக்கு வரவில்லை’’ என்றார்.