மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர் களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுகளை பெற தகுதியுடையவர்கள், வரும் 11-ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3-ம் தேதி இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.
அந்த வகையில், இந்தாண்டுக்கான விருது களை பெற தகுதியான திருவள்ளூர் மாவட்டத் தைச் சேர்ந்த சமூக சேவகர்கள், நிறுவனங்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர், வரும் 11-ம் தேதிக்குள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.