புதுவை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் நியமன எம்எல்ஏக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப் பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 3 பாஜக நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை கிடையாது என ஆளுங்கட்சி தரப்புஎதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில்சட்டப்பேரவையில் நடைபெறும்பலப்பரீட்சையில் நியமன எம்எல்ஏக் கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உள்ளது என உச்சநீதி மன்றம் ஏற்கெனவே தெரிவித்துள் ளது. அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் உறுதிப்படுத் தியுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் விலகலுக்கு பிறகு சட்டப் பேரவையில் இருக்கைகளை மாற்றி அமைத்து சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள் ளது. இதில் எதிர்க்கட்சி வரிசை யின் இறுதியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வ கணபதி, தங்கவிக்ரமனுக்கு அடுத்தடுத்த இருக்கை வழங்கப்பட் டுள்ளது. மேலும், பாஜக நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்க வருமாறு சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அழைப்பு விடுத்துள் ளார்.
அதோடு சட்டப்பேரவை அலுவல் பட்டியலில் ஒரே ஒரு அலுவலாக நம்பிக்கை கோரும் பிரேரணை மட்டுமே இடம்பெற் றுள்ளது. அதிலும், விவாதமும் வாக்கெடுப்பும் என இடம் பெற வில்லை. சபையில் கையை தூக்கி ஆதரவு, எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர். இந்த நிகழ்வுவீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது. இதனால், பேரவையில்விவாதமின்றி நேரடியாக வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது. இருப்பினும், சட்டப்பேர வையை பொருத்தவரையில் சபா நாயகரின் முடிவே இறுதியானது.
புதுவையில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் திருப்பங்கள், ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பலப்பரீட்சை ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை பயணம்
இந்நிலையில் அதிமுக கட்சித் தலைமை எம்எல்ஏக்களை சென் னைக்கு அழைத்தது. அதன்படி சட்டமன்ற கட்சித்தலைவர் அன் பழகன், அதிமுக கொறடா வையா புரி மணிகண்டன், அசானா, பாஸ்கர் ஆகியோர் சென்னை சென்றனர். அங்கு புதுச்சேரி மாநிலபொறுப்பாளர்கள் அமைச்சர் சம்பத், செம்மலை ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று மாலையில் அவர்கள் புதுவைக்கு திரும் பினர்.