வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் உயர்கல்வி படிக்கும் 24,098 மாணவ-மாணவிகளுக்கு இலவச டேட்டா கார்டுகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திறக் கப்பட்டுள்ள 44 மினி கிளினிக்கு களில் பணியாற்ற 26 தற்காலிக மருத்துவர்கள், 26 செவிலியர்கள் 26 மருத்துவ உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குதல், உயர்கல்வி படிக்கும் 6,761 மாணவ, மாணவிகளுக்கு 4ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இணையம் வழியாக தினசரி 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்கும் விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச டேட்டா கார்டுகளையும், அம்மா மினி கிளினிக்குகளில் தற்காலிகமாக பணியாற்ற 26 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினர்.
பின்னர், அமைச்சர் கே.சி வீரமணி பேசும்போது, "தமிழகம் முழுவதும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப் பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 106 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 44 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 26 மருத்துவர்கள், 26 செவிலி யர்கள், 26 மருத்துவ உதவி யாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, கல்லூரி மாண வர்கள் வீட்டில் இருந்தபடி கல்வியை தொடர 4-ஜி தொழில் நுட்பம் இணையம் கொண்ட 2-ஜிபி டேட்டா கார்டுகளை வழங்கி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கடந்த ஓராண்டாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்போது வட்ட அந்தஸ்துள்ள மருத்துவமனைகளாக தரம் உயர்ந் துள்ளன. திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் பல் வேறு மருத்துவ உபகரணங்கள், புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட் டுள்ளன.
தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருப் பத்தூர் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக்கல்லூரி அமைப் பதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட் டத்தில் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப்பணிகளும் தொடங்கப் பட்டுள்ளன. இன்னும் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டுமோ? அதை அரசு செய்ய தயாராக உள்ளது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் டி.டி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உயர் கல்வி படிக்கும் 17,337 கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இணையதள டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரிகளில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் டேட்டா கார்டுகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘கரோனா காலத்தில் மாணவர் கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று நல்ல முறையில்படிக்க இந்த 2 ஜிபி இணையதள டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியஅளவில் தமிழகம் உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 18 வயது நிரம்பிய மாணவர்கள் தங்களை வாக்காளர் களாக பதிவு செய்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் ரஹிலா பிலால், முத்துரங்கம் கல்லூரி முதல்வர் மலர், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.