வேலூரில் ஆட்டோ ஓட்டுநருக்கு இலவச சீருடைகளை வழங்கிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். அருகில், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் உள்ளிட்டோர். 
தமிழகம்

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்: பொதுச்செயலாளர் துரைமுருகன் வழங்கினார்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூ ரில் 3,068 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப் பட்டன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலி னின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மற்றும் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 3,068 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடைபெற்றது. திமுக தலைமை தேர்தல் பணிக்குழுச் செயலாளர் வி.எஸ்.விஜய் வரவேற்றார். திமுக மத்திய மாவட்டச்செயலாளர் ஏ.பி.நந்த குமார் தலைமை வகித்தார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப் பினர் கதிர்ஆனந்த், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 3,068 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக சீருடைகளை வழங்கினார். முன்னதாக திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி மற்றும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்துக்கு துரைமுருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அவைத் தலைவர் முகமதுசகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT