தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க அவசரக் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்டச் செயலாளர் சுந்தர விமல்நாதன். 
தமிழகம்

அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள்: பட்டியலிட்ட காவிரி விவசாயிகள் சங்கம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க அவசரக் கூட்டம் மாவட்டச் செயலாளர் சுந்தர விமல்நாதன் தலைமையில் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500-ம்விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 55 வயதை கடந்த பெண் விவசாயிகள், 58 வயதை கடந்த ஆண் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயத்தை ஊக்குவிக்க ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதுபோல, தமிழக விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். வேளாண் விஞ்ஞானிநம்மாழ்வாருக்கு கல்லணையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். அவரது பெயரில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும்.

2003-ம் ஆண்டு முதல் விவசாய மின் இணைப்பு பெற காத்திருக்கும் 4.26 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக சாதாரண முன்னுரிமை அடிப்படையில், மின்இணைப்புகள் வழங்க வேண்டும். புதிய விவசாய மின் இணைப்பு பெற பொதுப்பணித் துறையினரிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பு முதல் அணைக்கரை வரை7 இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சியினர் அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT