பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 
தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: போலீஸாருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துபோராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும் செங்கல்பட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் மற்றும் காந்தி சாலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பேரணியைத் தொடங்கினர். அப்போது பேரணிக்குபோலீஸார் திடீரென அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர, பழைய பேருந்து நிலையத்தில் பேரணியைத் தொடங்கி, மணிகூண்டு, புதிய பேருந்து நிலையம், வேதாசல நகர் வழியாக ராட்டிணங்கிணறு பகுதியில் பேரணியை நிறைவு செய்தனர். இந்தப் பேரணியில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT