தமிழகம்

இரு குழந்தைகள் உயிரிழப்பு; கோவையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்: 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரு குழந்தைகள் உயிர்இழந்ததையடுத்து, தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 3 மாத ஆண் குழந்தை மற்றும் சவுரிபாளையத்தை சேர்ந்தஇரண்டரை மாத ஆண் குழந்தைக்கு தடுப்பூசி போட்டநிலையில் உயிரிழந்தன.

மசக்காளிப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத குழந்தை,நிமோனியா காரணமாகவே உயிர்இழந்ததாக பிரேத பரிசோதனைஅறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறைசார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்டசுகாதாரத் துறையினர் கூறும்போது, “இரு குழந்தைகள் உயிர்இழப்பை தொடர்ந்து, பெண்டா ரொட்டா (Pentavalent rotavirus vaccine) என்றழைக்கப்படும் தடுப்பு மருந்தும், போலியோ சொட்டு மருந்தும் குழந்தைகளுக்கு போடுவதுதற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிக்கப்பட உள்ளனர். தடுப்பூசிகளால் பாதிப்புஏற்பட வாய்ப்பில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT