உசிலம்பட்டி அருகே மூச்சுத் திணற வைத்து பெண் சிசு கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர், பாட்டி கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைபட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(32), வேன் ஓட்டுநர். இவரது மனைவி சிவ பிரியங்கா(28). இவர்களுக்கு ஏற்கெனவே 7 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன.
சிவபிரியங்காவுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிப்.12-ம் தேதி பிறந்தது. இவர்களுக்கு ஏற்கெனவே 7 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. சிவபிரியங்காவுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிப்.12-ம் தேதி பிறந்தது.
அந்த குழந்தைக்கு பிப்.17-ல் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸார் விசாரித்தனர். கூடுதல் எஸ்.பி. வனிதா, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் பாண்டிராஜா ஆகியோரும் விசாரித்தனர்.
இதற்கிடையில், மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை நேற்று நடந்தது. அக்குழந்தை மூச்சு திணறடிக்கப்பட்டு இறந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சின்னச்சாமி, பிரியங்கா ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது, மூன்றாவது பெண் குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரித்தோம். பிரேதப் பரி சோதனையில் குழந்தை மூச்சு திணற வைத்து கொலை செய்திருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அந்த தம்பதி கைது செய்யப்பட்டனர் என்றனர்.
மேலும், குழந்தையின் பாட்டி நாகம்மாவுக்கு கைது செய்யப்பட்டனர்.