சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி, தொப்பம்பட்டி வட்டாரங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அமர பூண்டியில் விளையாட்டு பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு திண்டுக் கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் புஷ்பகலா வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தாலும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட் டத்தில் 50 ஆயிரத்து 614 விவ சாயிகள் வாங்கிய பயிர்க் கடன் தொகை ரூ.540 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மாநில அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.