தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பேரிலோவன்பட்டி வைப்பாற்றில் மணல் குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெத்து ஓவல்ராஜ் மகன்சென்றாயபெருமாள் (15). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன்ராமராஜ் (37) என்பவரும் நேற்று காலை தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கச் சென்றனர்.
அங்குள்ள வைப்பாற்றில் ஆடுகளை குளிப்பாட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த மணல் குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் சென்றாயபெருமாள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தத்தளித்தார். அவரை மீட்கராமராஜும் தண்ணீரில் இறங்கியுள்ளார். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கினர்.
நீண்ட நேரமாகியும் மகன் வீடுதிரும்பாததால் ராமராஜின் தந்தை குமார் தேடிச் சென்றபோது, வைப்பாற்று பகுதியில் ஆடுகள் மட்டும் நின்றிருந்தன. ராமராஜின் காலணி ஆற்றங்கரையில் கிடந்தது. இதனால்சந்தேகமடைந்த அவர், ஊர்மக்கள் உதவியுடன் ஆற்றுபள்ளத்தில் தேடத் தொடங்கினர்.
தகவல் அறிந்து விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்தலைமையில் போலீஸார் மற்றும்தீயணைப்புத்துறையினர் அங்குவந்து, இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரதேடுதலுக்கு பின்னர் சென்றாயபெருமாள், ராமராஜ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இது குறித்து எட்டயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.