தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோரை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்:ம.பிரபு 
தமிழகம்

சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

செய்திப்பிரிவு

தேர்தல் பணி குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி,வி.கே.சிங் ஆலோசனை நடத்தினர்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோரை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாநியமித்துள்ளார். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பயணம் மேற்கொண்டு வரும்மத்திய அமைச்சர்கள், நேற்று முன்தினம்கோவையில் கட்சியின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

நேற்று சென்னை வந்த கிஷன் ரெட்டி,வி.கே.சிங் ஆகியோர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். முக்கிய தலைவர்களின்தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, கட்சியின் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக இணை பொறுப்பாளர்சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர். மாலையில் பாஜக செய்தித்தொடர்பாளர்கள், ஊடக விவாதங்களில் பங்கேற்போருடன் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சர்கள், பின்னர் மாநில மையக் குழு கூட்டத்திலும் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT