திமுக கோவை மாநகர்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கோவையில் நேற்று செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
கொடிசியா மைதானத்தில் இன்று (பிப். 19) காலை 8 மணிக்கு நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின், பொதுமக்களி டம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இதில், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம் பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள், அனைத்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம். அந்த இடத்திலேயே விண்ணப்பம் வழங்கப்படும். அதில் கோரிக்கையை எழுதித் தரலாம். அல்லது தாங்கள் எழுதிக் கொண்டுவரும் மனுவை,விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்கலாம். தொடர்ந்து, பொதுமக்களிடம் ஸ்டாலின் பேசுகிறார்.
பின்னர், பிற்பகலில் காரமடையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மேட்டுப் பாளையம் தொகுதிமற்றும் நீலகிரி மாவட்டத்தில்உள்ள சட்டப் பேரவைத் தொகு திகளைச் சேர்ந்தவர்களிடம் மனுக்களைப் பெறுகிறார்.
இன்று இரவு கோவையில் தங்கும் அவர், நாளை (பிப். 20) பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பூர் மாவட்டத் துக்குச் செல்கிறார்.
திமுக ஆட்சியில்தான் கோவையில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அதிமுக ஆட்சியில் தண்ணீர் பந்தல் சாலை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் நடைபெறும்மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்காமல், கிடப்பில் போட் டுள்ளனர். நிலம் கையெடுப்பு தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமல் அவிநாசி சாலை மேம்பாலப் பணியை தொடங்கியதால், பொதுமக்கள் நீதிமன்றத்துக்குச் சென்று, தடை உத்தரவு பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.