சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியா பாரிகள் நேற்று நடத்திய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தால் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன.
தி.மலை மாவட்டம் சேத்துப்பட் டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு தி.மலை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நெல், மணிலா, மிளகாய் உள்ளிட்ட விளைப் பொருட்கள், விவசாயிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. நெல் அறுவடை நடைபெறுவதால், நெல் மூட்டைகளின் வரத்து அதிகரித்துள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் நெல் உள்ளிட்ட விளைப் பொருட் களுக்கு வசூலிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டணம், வரி மற்றும் சேவை வரி மீண்டும் வசூல் செய்யப்படுகிறது. இதற் கிடையில், விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களது களத்துக்கே சென்று அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதையறிந்த அதிகாரிகள், வாகன தணிக்கை மற்றும் களப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரிசி ஆலை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால், வியாபாரி களிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதை தடுக் கின்றனர். இதனால், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக, ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளுக்கு விலையை நிர்ணயம் செய்யாமல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் நேற்று வியாபாரிகள் ஈடுபட்டனர். அவர்களிடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. வியாபாரிகளின் போராட்டத்தால், சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன. எனவே, வியாபாரிகள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனர்.