முழுமையாக நடைமுறைக்கு வந்த ‘பாஸ்டேக்’ முறையால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கனகர வாகன ஓட்டுநர். 
தமிழகம்

முழுமையாக நடைமுறைக்கு வந்தது ‘பாஸ்டேக்’ - சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் ‘பாஸ்டேக்’ எனும் மின்னணு அட்டைப் பரிவர்த்தனை முறை நேற்று முன்தினம்அதிகாலை முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சுங்கக் கட்டணத்தை மின்னணு அட்டைப் பரிவர்த்தனையை பின்பற்றாமல் நேரிடையாக செலுத்தினால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனசுங்கச் சாவடி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மின்னணுபரிவர்த்தனை அமலுக்கு வந்த நிலையில், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி வழியாக கனரக வாகனம் ஒன்று பயணித்தது. ஆனால்அந்த வாகனத்தில் மின்னணு அட்டை இல்லாததால், நேரிடையாக பணம் செலுத்தியபோது, சுங்கச் சாவடி ஊழியர்கள் ரூ.590 கேட்டுள்ளனர் . இதனால் வாகன ஓட்டிக்கும், சுங்கச் சாவடி ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கனரக வாகன ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்தினார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், வாகன ஓட்டியிடம் புதிய விதிமுறையை எடுத்துச் சொல்லி, கட்டணத்தை செலுத்த வலியறுத்தினர். அதன் பின் அவர் இரு மடங்குக் கட்டணைத்தைச் செலுத்தி வாகனத்தை இயக்கிச் சென்றார்.

சுங்கச் சாவடியில் நேற்றும் இதே நிலை தொடர்ந்தது.

வழக்கமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் வெள்ளி முதல் திங்கள் வரை நாளொன்றுக்கு 3 ஆயிரம் வாகனங்கள் வரை பயணிக்கும். மற்ற நாட்களில் 1,500 வாகனங்கள் வரை பயணிக்கும். ‘பாஸ்டேக்’ எனும் மின்னணு அட்டைப் பரிவர்த்தனை முழுமையாக நடைமுறைக்கு வந்ததால் வாகன இயக்கம் கடந்த இரு தினங்களாக ஆயிரத்துக்கும் குறைவாக இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

‘பாஸ்டேக்’ அறிமுகம் காரண மாக சுங்கச் சாவடியில் ஊழியர் குறைப்பு செய்யப்பட்டுள்ளதா என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கார்ல்மார்க்ஸிடம் கேட்டபோது, “இதுவரை அதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை. மாறாக புதிதாக கூடுதலாக ஆட்சேர்ப்பு நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில், வேலை பளு குறைந்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT