வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயத்தில் நடந்த சாம்பல் புதன் நிகழ்ச்சியில் பங்கேற்றோர். 
தமிழகம்

சாம்பல் புதனை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் சாம்பல் புதன் நிகழ்வு நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று சாம்பல் புதனாக அனுசரிக்கப் பட்டது. திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தில் ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை செல்வராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயத்தில் பங்குத் தந்தை எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையிலும், சின்னுபட்டி அந்தோணியார் ஆலயத்தில் அருட்தந்தை அற்புதசாமி தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. வத்தலகுண்டு அருகே மரியா பட்டி, மேலக்கோவில்பட்டி, மைக்கேல்பாளையம், நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப் பலி நடைபெற்றது.

மதுரை

மதுரை தூய மரியன்னை பேராலயத்தில்பேராயர் அந்தோணிபாப்புசாமி திருப்பலி நிறைவேற்றினார். ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயம், அஞ்சல்நகர் தூய சகாய அன்னை ஆலயம், புதூர் லூர்து அன்னை ஆலயம், டவுன் ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம் மற்றும் சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் `மனம் திரும்பி நற்செய்தியை நம்பு' என்று சாம்பலால் சிலுவை அடையாள மிட்டனர்.

SCROLL FOR NEXT