மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை வழங்க வலியு றுத்தி வேலூர் எஸ்.பி., அலுவல கத்தில் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு அடுத்த சாத்கர் ஊராட்சி கள்ளிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகி என்பவரது தலைமை யில் 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்க எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்ப தாவது, "வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டை காலணி, கள்ளிப்பேட்டை, ஏரிக் குத்தி, அம்பேத்கர் நகர், பங்களா மேடு, பேரணாம்பட்டு, கொண்ட மல்லி, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் நாங்கள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு சாராயம் காய்ச்சு வது மற்றும் அதை விற்பனை செய்வது உள்ளிட்ட குற்றச்செயல் களை செய்து வந்தோம்.
மாவட்ட காவல் துறை சார்பில் சாராயத்தொழிலில் இருந்து விலகி சமூகத்தில் சிறந்த தொழில்களை செய்ய தயாரானால், குற்ற வழக்கில் இருந்து விடுவிப்பது குறித்தும், மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மாற்றுத்தொழிலுக்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு எங்கள் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாராய தொழிலை கைவிட்டு கறவை மாடுகள் வாங்கிதொழில் செய்து பிழைத்துக் கொள்ள முடிவு செய்தோம். இதை அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்தோம்.
அரசு அதிகாரிகளும், எங்கள் கிராமங்களைச் சேர்ந்த முன்னாள் சாராய வியாபாரிகளுக்கு மறு வாழ்வு திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், 3 ஆண்டுகள் கடந்தும் கறவை மாடுகள் வழங்கப்படவில்லை. அதற்கான ஆய்வுகள் முறைப்படி நடத்தி ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், கறவை மாடுகள் வழங்காததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்ற எஸ்.பி.,அலுவலக அதிகாரிகள், இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதனையேற்று, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.