தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர், புரசை, வண்ணையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடும் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொதுமக்கள் அதிகமாக கூடும் தி.நகரில் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் சாலையில் 2 துணை ஆணையாளர்கள், 3 உதவி ஆணை யாளர்கள், 5 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள், 80 உள்ளூர் காவலர்கள், 200 ஆயுதப்படையினர், 150 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 100 ஊர்க்காவல் படை யினர் உட்பட மொத்தம் 560 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இரண்டு ஆய்வாளர்கள் தலை மையில் 40 போலீஸார் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் சாதாரண உடைகளில் பொதுமக்களுடன் கலந்து சென்று திருடர்களை கண்டுபிடிப்பார்கள். தி.நகரில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தி.நகரில் மட்டும் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எல்இடி டிஸ்பிளே, துண்டு பிரசு ரங்கள், ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு அறிவிப்பு கள் கொடுக்கப் படுகின்றன. அவசர உதவிக்கு 9498100176 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தி.நகரில் எந்த இடத்தில் இருந்தாலும் உடனடி போலீஸ் உதவி கிடைக்கும்.

புரசைவாக்கம்

புரசைவாக்கத்தில் ஒரு துணை ஆணையர் தலைமையில் 1 உதவி ஆணையர், 8 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள், 15 தலைமைக் காவலர்கள், 30 காவலர்கள், 80 ஆயுதப்படை போலீஸார், 20 சிறப்பு காவல் படையினர், 60 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 230 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஓட்டல் சந்திப்பு, வெள்ளாளர் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள். இங்கும் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வண்ணாரப்பேட்டை

வண்ணாரப்பேட்டையில் 2 உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள், 60 காவலர்கள் பணியில் இருப்பார்கள். எம்.சி சாலை, ஜி.ஏ சாலைகளில் 3 காண்காணிப்பு கோபுரங்கள் அமைக் கப்பட்டுள்ளன. வேளச்சேரி, தாம்ப ரத்தில் அந்தந்த பகுதி காவல் ஆய் வாளர்கள் தலைமையில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு பாது காப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT