தமிழகம்

‘இந்தியா பிபிஇ கிட் தயாரிக்கும்போது சிலர் டூல்கிட் தயாரிப்பதில் மும்முரம்’

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.இதற்கு ஆதாரமாக, ட்விட்டரில் உலவிய டூல்கிட் ஆவணத்தை கூறுகின்றனர்.இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவியை டெல்லி போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது ட்விட்டர் பதிவில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகுக்காக இந்தியா பிபிஇ கிட் (பாதுகாப்பு உடை) தயாரித்துக் கொண்டிருந்தபோது சிலர் இந்தியர்களுக்கு எதிராக டூல்கிட் தயாரிப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர். வெட்கக்கேடு!” என்று கூறியுள்ளார். 22 வயது பெண்ணை போலீஸார் கைது செய்திருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அமைச்சர் ஷெகாவத் மற்றொரு பதிவில், “வயது ஒரு அளவுகோலாக இருக்குமானால் 21 வயதில் நாட்டுக்காக உயர்தியாகம் செய்த, பரம் வீர்சக்ரா செகண்ட் லெப்டினன்ட் அருண் கேத்ரபாலுக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். டூல்கிட் பிரச்சாரம் செய்த சிலருக்காக அல்ல” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT