தமிழகம்

பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா? - அரசிடம் திட்ட மதிப்பீடு சமர்பிப்பு

செய்திப்பிரிவு

பாலாற்றின் குறுக்கே, நான்கு இடங்களில் தடுப்பணை மற்றும் அணைக்கட்டு அமைக்க, கீழ் பாலாறு வடிநில கோட்டம் ரூ.24 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலாறு, தமிழ்நாட்டில் வாணியம் பாடி பகுதியில் நுழைந்து, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் என 222 கி.மீ.,பயணித்து, புதுப் பட்டினம் அருகே உள்ள வயலூரில் கடலில் கலக்கிறது. இந்தப் பாலாற்றின் கிளை நதி களாக செய்யாறு மற்றும் வேகவதி நதிகள் உள்ளன. இந்நிலையில், பருவமழை பொய்த் ததன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்தின்றி வறண்டு காணப் படுகிறது. மேலும், ஆற்றுமணல் கொள்ளைக் காரணமாக பல இடங்களில் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறதளவு மழை மற்றும் செய்யாற்றில் வரும் தண்ணீரினால், திருமுக்கூடல் பகுதியை அடுத்துள்ள பாலாற்றில் அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதன் மூலம் 12 ஏரிகள் நீர் வரத்து பெறும்நிலை உள்ளது. பாலாற்றின் பராமரிப்புப் பணிகளை, கீழ்பாலாறு வடிநில கோட்டம் பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத் தால் அவ்வப்போது செல்லும் சிறதளவு தண்ணீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயிகளின் பாசனத்துக்கு பயன்படுத்தலாம். அதனால், பல்வேறு இடங்களில் தடுப்பணை கள் கட்ட வேண்டும் என விசாயி கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலை யில், பாலாற்றின் குறுக்கே தடுப் பணைகள் மற்றும் அணைக்கட்டு அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, வயலூர், பழவேலி, எல்என்புரம், நல்லாத்தூர் ஆகிய இடங்களில் தடுப்பணை அமைக்க ரூ.15 கோடியும். கொல்லமேடு, தொள் ளாழி, ஈசூர், நெல்வாய் ஆகிய இடங்களில் அணைக்கட்டு அமைக்க ரூ.9 கோடி என, திட்டமதீப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, பொது பணித்துறை வட்டாரங்கள் கூறிய தாவது: தடுப்பணைகள் அமைப்ப தின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதால், அரசு ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT