தமிழகம்

முழு சம்பளம் கோரி கும்பகோணம் தூய்மைப் பணியாளர்கள் வழக்கு: தஞ்சாவூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

முழு சம்பளம் கோரி கும்பகோணம் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் தஞ்சாவூர் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் செல்வராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கும்பகோணம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தனியார் ஏஜென்சி மூலம் 415 பேர் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.385 நகராட்சி வழங்குகிறது. இதில் ரூ.275 மட்டும் தான் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு நாள் சம்பளத்தில் ஒருவருக்கு ரூ.110 வீதம் தனியார் எஜென்சி எடுத்துக்கொள்கிறது. எனவே, தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி வழங்கும் ரூ.385-யை அப்படியே வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக கும்பகோணம் நகராட்சி ஆணையர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT