இலங்கையில் கரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள மூக்குப் பொடி பற்றாக்குறையை தொடர்ந்து ராமேசுவரம் அருகிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மூக்குப்பொடி டப்பாக்கள் 2,500 சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.
இந்தியாவில் புகையிலை அல்லது குட்கா பயன்படுத்துவது போன்று இலங்கையில் போதை தரும் மூக்குப்பொடி அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்படு கிறது. புகையிலை, மூக்குப்பொடி போன்றவற்றை இந்தியாவில் இருந்து இலங்கை இறக்குமதி செய்து கொள்கிறது.
தற்போது இலங்கையில் கரோனா ஊரடங்கால் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே இலங்கை இறக்குமதி செய்து கொள்கிறது. இதனால் மூக்குப்பொடி உள்ளிட்ட போதைப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ராமேசுவரம் அருகே வேதாளை குயவன் தோப்பு கடற்பகுதியிலிருந்து இலங் கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்த இருப்பதாக சுங்கத்துறை யினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து மேற்கொண்டனர்.
ரோந்தின்போது வேதாளை குயவன் தோப்பு கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப் படகில் இருந்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை கண்டதும் இரண்டு பண்டல்களை கடற்கரையில் தூக்கி வீசிவிட்டுதப்பிச் சென்றனர்.
கடற்கரையில் கிடந்த 2 பெரிய பண்டல்களை கைப்பற்றியபோது அதிலிருந்து இரண்டு பண்டல்களில் 100 அட்டைபெட்டிகள் இருந்தன.
ஒவ்வொரு அட்டைப் பெட்டிகளிலும் 25 மூக்குப்பொடி டப்பாக்கள் வீதம் 2,500 டப்பாக்கள் இருந் தன. மேலும் தப்பிச் சென்ற கடத்தல்காரர்களை மண்டபம் கடலோர காவல் படையினர் தேடி வரு கின்றனர்.