நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனப் பகுதியில் சுமார் 3 மாத குட்டி யானை அதன் தாயிடமிருந்து பிரிந்து தனியாக இருந்ததை வனத் துறையினர்கண்டனர். அதன் நெற்றியில்பலமான காயம் ஏற்பட்டு, சீல் பிடித்திருந்ததால், சோர்வாககாணப்பட்டது.
முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், குட்டியின் காயத்துக்கு சிகிச்சை அளித்து, சோர்வை போக்க திரவங்கள் கொடுத்தார். குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், துரதிஷ்டவசமாக குட்டி யானை உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.