நடைபெறவிருக்கும் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விடும்புவோர் வரும் 17-ம் தேதி புதன்கிழமை முதல் 24-ம் வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.25,000-மும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000-மும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளராகப் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்டத் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களின் விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.
விண்ணப்பப் படிவத்தை கட்சி அலுவலகத்தில் ரூ.1000/- வீதம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.