தமிழகம்

புதுச்சேரி நகரப் பகுதியில் தடுப்புகள் அகற்றம்

செய்திப்பிரிவு

முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்து உத்தரவிட்டதை அடுத்து புதுச்சேரி நகரப் பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப் பட்டன.

புதுச்சேரி துணைநிலை ஆளு நர் கிரண்பேடியை கண்டித்து கடந்த மாதம் காங்கிரஸ், கூட் டணி கட்சியினர் போராட்டம் அறிவித்த நிலையில் ஆளுநர் மாளிகை,சட்டப்பேரவை, தலைமை செய லகம் உள்ளிட்ட இடங்களை சுற்றி500 மீட்டர் தூரத்துக்கு 144 தடைஉத்தரவு போடப்பட்டது. இதைய டுத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

போராட்டம் முடிந்து பல நாட்கள் ஆகியும் தடுப்பு கட்டைகள் அகற்றப்படாமல் இருந்ததால் மணக்குள விநாயகர் கோயில், சட்டப்பேரவை, தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வர முடியாமல் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதனிடையே நகர பகுதியில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்ற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். ஆனால் சில இடங்களில் மட்டும் தடுப்புகள் அகற்றப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் தடுப்புகள் போடப்பட்டிருக்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வுநடத்தினார். பின்னர் ஆளுநர் மாளி கையை தவிர மற்ற இடங்களில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை உடனே அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை சட்டப்பேரவை, மணக்குள விநா யகர் கோயில், ரோமன் ரோலண்ட் நூலகம் உள்ளிட்ட பகுதிகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற் றப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி அவ்வழியே சென்றனர்.

SCROLL FOR NEXT