தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் நகரமே பாழ்: தூத்துக்குடி எம்எல்ஏ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் அத்தியாவசிய பணிகள் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் தூத்துக்குடி மாநகரமே பாழாகியுள்ளது.

குறிப்பாக ஸ்மார்ட் சாலை என்ற பெயரில் மாநகரத்தில் நன்றாக உள்ள முக்கிய சாலை கள் அனைத்தையும் தோண்டி போக்கு வரத்தை சீா்குலைத்து ள்ளனா். பூங்காக்களை அழகுபடுத்து கிறோம் எனச் சொல்லி பல கோடி ரூபாயை வீணடித்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி களால் மழைநீா் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கு வதற்கு வழி செய்துள்ளனா்.

சி.வ.குளத்தை சீரமைக்கிறோம் எனச் சொல்லி ரூ.19 கோடியை வீணடித்து, மழைநீா் வரும் பாதையையும் அடைத்துவிட்டனர். இதனால் மழைநீா் குளத்துக்கு செல்லாமல் தபால் தந்தி காலனி, விஎம்எஸ் நகா், நேதாஜி நகா், தேவா் காலனி, தனசேகரன் நகா், முத்தம்மாள் காலனி, ராம்நகா், ரஹ்மத் நகா் குடியிருப்புகளைச் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சுமார் 8 ஏக்கரில் அமைந்திருந்த சலவைத் தொழிலாளா்களின் தொழிற்கூடத்தை சீரமைப்பதாக கூறி, பணிகளை முறையாக செய்யாததால், 2 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதற்கெல்லாம் விரைவில் நல்ல முடிவு காணப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT