திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 270 கிராமங்களில் 810 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஒரு நாள் சுற்றுலாவுக் கான ஏற்பாடுகள் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று மேற்கொள் ளப்பட்டது. அதில், முதற்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் ஒரு நாள் சுற்றுலாவாக ஏலகிரி மலைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
50 வயதை கடந்த 40-க்கும் மேற்பட்ட காவலர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளர் பழனி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
ஏலகிரி மலை, மங்கலம் கிராமம் அருகேயுள்ள சிவன் கோயில் பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் சுமார் 600 மீட்டர் உயரமுள்ள ஏலகிரி மலையில் டிரக்கிங் மேற்கொண்டனர். அதன்பிறகு ஏலகிரி கோடை விழா அரங்கில் அனைத்து காவலர்களும் ஒன்று கூடினர். அவர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் கலந்துரையாடினார்.
இதையடுத்து, அனைத்து காவலர்களுக்கும் எஸ்.பி., டாக்டர்.விஜயகுமார் மதிய உணவு வழங்கி, அவரும் உணவருந்தினார். காலை8 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணியளவில் முடிவுற்றது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் எஸ்.பி., டாக்டர்.விஜயகுமார் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத் தம் 750 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவே ஒரு நாள் சுற்றுலாவாக ஏலகிரி மலைக்கு 50 வயதை கடந்த 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று (நேற்று) அழைத்து வந்து குறைகளை கேட்டறிந்தேன்.
பிள்ளைகளின் கல்விச்செலவுக் கான வங்கி கடனுதவி, விருப்பப் பட்ட கல்லூரியில் இடம் பெறுவது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளோம். இதனால், குடும்பத்தை பற்றிய பயம் அவர்களுக்கு போகும் என்பதை மாவட்ட காவல் நிர்வாகம் முழுமையாக நம்புகிறது.
ஏலகிரி மலைப்பகுதியில் 12 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளதால், அதை புதுப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர் மாவட் டத்தில் உள்ள 270 கிராமங்களில் ‘கிராம கண்காணிப்பு குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் கிராமப்பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை கண்காணித்து அதை தடுக்கமுயற்சிகள் எடுத்து வருகிறோம்.இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 270 கிராமங் களில் ஒரு கிராமத்துக்கு 3 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தரூ.58 ஆயிரம் தேவைப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் 810 கேம ராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிராமப் பகுதிகளில் பொருத்தப்படும் கண் காணிப்பு கேமராக்களின் கட்டுப் பாட்டு அறைகள் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலை யங்கள், துணை காவல் கண் காணிப்பாளர் அலுவலகங்களில் வைக்கப்படும். விரைவில், மாவட் டம் முழுவதும் 810 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.