தமிழகம்

ஐபேக்குக்கும்- திமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை: கே.என்.நேரு கருத்து

செய்திப்பிரிவு

மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஐபேக் நிறுவனத்துக்கும், திமுகவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஐபேக் நிறுவனத்துக்கும், திமுகவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் வெற்றி பெறுவதற்காக, எங்களுக்கு ஆலோசனை கூறும் ஒரு நிறுவனம் தான் ஐபேக். அவர்களுக்கும், எங்களுக்கும் ஏன் பிரச்சினை வரப்போகிறது? மைதானத்தை சீரமைப்பது, குடிநீர் மற்றும் உணவு வசதி,கொடி மரம் தயார் செய்வது, 50 ஆயிரம் வாகனங்களை நிறுத்த இடம் தயார் செய்வது போன்ற பணிகள் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. மற்றவற்றை ஐபேக்நிறுவனத்தினர் தலைவருடன் பேசி வருகின்றனர்.

அதிமுகவும், அமமுகவும் சேர்ந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. திமுகவும், அதிமுகவும் இல்லாத புதிய கூட்டணி அமைக்கப் போவதாக கமல்ஹாசன் கூறி வரும் நிலையில், நாங்களாகச் சென்று எப்படி அவரிடம் கூட்டணி குறித்து பேச முடியும் என்றார்.

SCROLL FOR NEXT