கனமழை பெய்யும் என்பதால், மாவட்ட தலைநகரங்களில் அலுவலர்களை தயார் நிலையில் வைக்கும்படி தமிழக மாநில பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 15,16,17 தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழக பேரிடர் மேலாண்மை முகமைக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து, வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மாவட்ட ஆட்சியர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், தலைநகரில் போதுமான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பு, இழப்பு, சேதம் குறித்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு தகவல் அளிக்க வேண்டும். பொதுப்பணித்துறை, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.