டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகிய பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. பட்டப் படிப்பை கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்டோபர் மாதம் 12-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தேர்வர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு நவம்பர் 11-ம் தேதியிலிருந்து 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. குரூப்-2ஏ தேர் வுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப் பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.