தமிழகம்

மோடியின் தமிழக வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

செய்திப்பிரிவு

தேர்தல் தொடர்பாக விருதுநகரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் விருதுநகர், மதுரை உட்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். கோட்ட அமைப்புச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.

மாநிலத் துணைத்தலைவர் நயினர் நாகேந்திரன் சிறப்புரை யாற்றினார். தொகுதி பொறுப்பாளர் கவுதமி, பொதுச் செயலாளர் பொன்ராஜ் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

பிரதமர் நிறைய திட்டங்களை தமிழக மக்களுக்குக் கொடுத் துள்ளார்.

இது குறித்து பிரசுரங்கள் அச்சடித்துப் பொதுமக்களிடம் வழங்குவோம். பிரதமரின் தமிழக வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். சசிகலா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT