தமிழகம்

குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து திண்டுக்கல்லில் அமைச்சரை மக்கள் முற்றுகை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் இரண்டு இடங்களில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை மக் கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் அருகே கொட்டப் பட்டியில் நடமாடும் ரேஷன் கடை வாகனத்தைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் சென்றார்.

அப்போது தூய்மைப் பணி யாளர்கள் வசிக்கும் குடியி ருப்புப் பகுதியில் குடிநீர் இல்லை, கழிவுநீர் கால்வாய் இல்லை. சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி அமைச்சரின் காரை மறித்து கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சருடன் வந்த நிர் வாகிகள் அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதேபோல, திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சி பிஸ்மி நகரில் புதிதாகக் கட்டப் பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைத் திறந்துவைக்க அமைச்சர் சென்றார்.

அப்போது பிஸ்மி நகர் மக்கள், மாதத்துக்கு ஒருமுறைதான் தங்களுக்குக் குடிநீர் கிடைப்ப தாகக் கூறி அமைச்சருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முறையாகக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை அமைச்சர் சமாதானப்படுத்தினார்.

முன்னதாக, கொட்டப்பட்டியில் நகரும் ரேஷன்கடை வாகனத்தை தொடங்கிவைத்த அமைச்சர் சீனி வாசன், பின்னர் பிஸ்மி நகரில் நீர்த்தேக்கத் தொட்டியைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்தராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT