திமுக தலைவர் முதல்வராக வரப்போகிறார், என மனதில் உள் ளதைத்தான் அதிமுக எம்எல்ஏ., பரமசிவம் பேசியுள்ளார், என திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் பேசியதாவது: திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வேடசந்தூர் அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவம், நாளைக்கு திமுக தலைவர் முதல்வராக வரப்போகிறவர், என மனதில் உள்ளதைப் பேசியுள்ளார். வேட சந்தூர் தொகுதிக்கு அவர் எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழிற்பேட்டை அமைத்து இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன் காக்க பதப்படுத்தும் தொழிற் சாலை அமைக்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்க நட வடிக்கை எடுக்கப்படும், என்றார். தொடர்ந்து வடமதுரை, ஒட்டன் சத்திரத்தில் பிரச்சாரம் மேற் கொண்டார். பிரச்சாரத்தின்போது திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, வேலுச்சாமி எம்.பி. மாவட்டச் செயலாளர்கள் (மேற்கு) அர.சக் கரபாணி எம்.எல்.ஏ., (கிழக்கு) இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.