தமிழகம்

ரங்கசாமியுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை: முதல்சுற்றில் சுமூக முடிவில்லை

செய்திப்பிரிவு

என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பார்வையாளர் நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. புதுவையிலும் இந்த கூட்டணி நீடிக்கும். இந்த கூட்டணியில் புதுவையின் பிரதான எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பிரச்சினையாகியுள்ளது. தற்போது மாநில அந்தஸ்து விவகாரத்தையும் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக இரு கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஒரு மணி நேரம் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்கப்பட்டது. என்ஆர் காங்கிரஸ் பெரும்பான்மை பெறுவதற்கு ஏற்ப 18 தொகுதி வரை தனக்கு தேவையானவற்றை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகளை அதிமுக, பாஜக நிற்கலாம் என்று தெரிவித்த கோரிக்கையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT