கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதிக்குட்பட்ட பகுதி யில் முல்லை பெரியாறு அணை உள்ளது. இதனால், பெரியாறு அணை விவகாரத்தில் அந்த தொகுதி எம்எல்ஏ மற்றும் பீர்மேடு ஊராட்சிப் பிரதிநிதிகள் அம்மாநில வனத்துறை மற்றும் நீர்பாசனத் துறையினர் மூலம் தமிழக பொதுப் பணித் துறையினருக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து இடையூறு களை செய்து வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் பொருட்டு, கேரள உள்ளாட்சி தேர்தலில் பீர்மேடு வார்டில் வெற்றி பெற்றால் ஊராட்சித் தலைவர் பதவியை அனைத்து வார்டு உறுப்பினர் ஆதரவுடன் கைப்பற்றி விடலாம். அவ்வாறு கைப்பற்றினால், பெரி யாறு அணை பிரச்சினையில் உள் ளாட்சிப் பிரதிநிதிகள் ஆதரவுடன், அம்மாநிலத்தில் குரல் கொடுக்க முடியும் என அதிமுக தலைமைக் கழகம் முடிவு செய்தது. இதைய டுத்து, பீர்மேடு 1-வது வார்டில் அதிமுக வேட்பாளராக பிரவீணா நிறுத்தப்பட்டார்.
இத்தேர்தலில் அதிமுக, காங் கிரஸ், இடதுசாரி என மும்முனைப் போட்டி நிலவியது. இந்நிலையில், நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 189 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் பிரவீணா வெற்றி பெற்றார். அதிமுக முதன்முறையாக பீர்மேடு, மறையூர், குண்டுமலை ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, அம்மாநில ஆளும் கூட்டணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.