தமிழகம்

திமுகவின் ‘பி டீம்’ யார்?

செய்திப்பிரிவு

நான்கு ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சசிகலா, பிப்.8-ம் தேதி சென்னை வந்தார். அன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் சசிகலா வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, “தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின்போதே அதிமுக ஆட்சியை கலைக்க, திமுகவுடன் இணைந்து தினகரன் செயல்பட்டார். எனவே சசிகலாவும், தினகரனும் திமுகவின் ‘பி டீமாக’ செயல்படுகின்றனர்’’ என்றார்.

அதே போல், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு பிப்.5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், சசிகலா முதல்வராக முயற்சி எடுத்த நிலையில், பிப்.7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில் தியானம் நடத்தி, தனது தர்மயுத்தத்தை தொடங்கினார்.

இதையடுத்து, பிப்.8-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டப்பேரவையில் துரைமுருகன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை சுட்டிக்காட்டி, ஓபிஎஸ் திமுகவின் ‘பி டீம்’ என்று குறிப்பிட்டார். இரு தரப்பினரும் இதே பிப்.8-ம் தேதி இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளது ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதை உணர்த்துகிறது.

SCROLL FOR NEXT