தமிழகம்

நபிகள் குறித்து சர்ச்சை பேச்சு: பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப் படுகிறது.

இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெரம்பூரைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கல்யாணராமன் மீது பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT