தமிழகம்

நான் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன்: சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் கருத்து

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான் என்று நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

சிவாஜி கணேசனின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான ராம்குமார், பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். இதைமுன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராம்குமார் கூறியதாவது:

எனது தந்தை சிவாஜி கணேசன், தமிழக மக்களின் மனங்களை வென்ற கலைஞர். எந்தப் பிரதிபலனையும் பாராமல் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். ஆனால், அவருக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. கடைசிவரை ஒதுக்கியே வைத்திருந்தது. இது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் ஒருகட்டத்தில் மிகுந்த மன வேதனையுடன் காங்கிரஸிலிருந்து விலகினார்.

பாஜகவில் இணைவது நான் திடீரென எடுத்த முடிவு அல்ல. பாஜக தலைவர்களுடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட காலமாகவே நல்ல நட்பு உள்ளது. சுஷ்மா ஸ்வராஜ் போன்ற தலைவர்கள் எங்கள் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். நான் எனது தந்தை சிவாஜியின் ரசிகன். அதுபோல பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன். மக்கள் நலனுக்காக உழைத்து வரும் மோடியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே பாஜகவில் இணைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நான் எனது தந்தை சிவாஜியின் ரசிகன். அதுபோல பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன். மக்கள் நலனுக்காக உழைத்து வரும் மோடியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே பாஜகவில் இணைகிறேன்.

SCROLL FOR NEXT