சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் நேற்று காலமானார்.
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 7 தலைமுறையாக இயங்கி வரும் சிவராஜ் சித்த வைத்திய சாலையின் இயக்குநரான சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் (78) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
அவரது பூர்வீக வீடான சிவதாபுரம் அகத்தியர் தோட்டத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
சேலம் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி: சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் காலமானசெய்தி அறிந்து வேதனை அடைந்தேன். சித்த வைத்தியத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரதுமறைவு சித்த மருத்துவத் துறைக்கு பேரிழப்பு. அவரதுகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ்: பாரம்பரிய சித்த வைத்தியர் குடும்பத்தில் பிறந்த சிவராஜ் சிவக்குமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவம் செய்து வந்தார். சேலத்தில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிஅதிக சித்த மருத்துவர்களை உருவாக்கிய பெருமையும்இவருக்கு உண்டு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.