தொழிற்சாலை தொடங்க உரிமம்பெறவும், புதுப்பித்தவும் ஆன்லைனில் பெறும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது என்று தொழில் மற்றும் வணிகத்துறை செயலர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வணிக மற்றும் தொழில் முனைவோருக்கான முறைகளை எளிமையாக்கும் விதத்தில் 301 சீர்திருத்தங்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டியுள்ளது. அதன்படி, வணிக மற்றும் தொழில் முனைவோருக்கு சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து தங்கு தடையின்றி உரிமம்மற்றும் அனுமதி வழங்கல் உள்ளிட்ட அனைத்து வசதிகளை தர, ஒருபொதுத்தளத்தை உருவாக்கி,அதன் மூலம் தர அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதில் 258 சீர்த்திருத்தங்களை செய்துள்ளோம். இதில் எத்தனை ஏற்கப்பட்டன என்பது ஒரு வாரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும். இதற்கான தரவரிசை பட்டியலில் பின் தங்கியிருந்த புதுச்சேரி இச்சீர்த்திருத்தங்கள் செய்துள்ளதன் மூலம் பட்டியலில் முன்னேறும்.
முக்கியமாக தொழில்துறையில் தொழிற்சாலை தொடங்க உரிமம்பெறவும், புதுப்பிக்கவும் ஆன்லைனில் பெறும் முறை நடை முறைக்குவந்துள்ளது. உரிமத்தை புதுப்பித்தால் 10 ஆண்டுகளுக்கு செல்லு படியாகும். தொழில் முனைவோர் உரிமத்தை புதுப்பிக்க கட்டணம் மட்டும் செலுத்தினால் போது மானது.
ஆய்வு அதிகளவில் நடப்பதாகவும், தனித்தனியாக துறையினர் ஆய்வு நடத்துவதாக குறைகளை தொழில்முனைவோர் தெரிவித்தனர். அதனால் புகார் வந்தால் மட்டுமே ஆய்வு நடத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளுக்கு ஆய்வு தேவையில்லை. ரசாயனம் தொழிற்சாலைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறைஆய்வு செய்யலாம். ஆய்வு மேற்கொள்ளும்போது தனித் தனியாக செல்வதை தவிர்த்து ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தப் படும்,
ஒற்றை சாளர முறையில் விரிவாக்கப்பட்டு, 20 துறைக ளும் தொழில்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர்தங்கள் விண்ணப்ப நிலையை அறியலாம். இன்னும் 43 சீர்த்திருத்தங்கள் 12 துறைகளில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. நிர்வாக சிக்கல்கள் இருக்கிறது. பிப்ரவரி இறுதிக்குள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
தொழிற்சாலைகளுக்கு ஆய்வு சென்று வந்த பிறகு, ஆய்வு அறிக்கை 48 மணிநேரத்தில் இணையத்தில் பதிவேற்றப்படும்.
கொம்யூன் பஞ்சாயத்துகளில் தொழிற்சாலை தொடர்பான பணிகள் தாமதமாவதால் அதை விரைவுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.