தமிழகம்

மழையால் பரவும் நோய்களை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மழையால் பரவுகிற நோய்களை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கை:

உள்கட்டமைப்பு குறைபாடுகளால் ஒரு நாள் மழைக்கே சென்னை வாழத் தகுதியற்ற மாநகராகிவிட்டது. மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

சென்னையின் மக்கள் தொகை பெருக் கத்துக்கு ஏற்ப அடிப்படை உள்கட்ட மைப்பு வசதிகள் பெருக்கப்படவில்லை. 1970-களில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து சீர்கேடுகளுக்கும் மூல காரணம் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுகதான்.

மழைநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் வேக மாக பரவத் தொடங்கியுள்ளன. அவற்றை கட்டுப்படுத்த அனைத்து பகுதி களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT