உயர்கல்வியில் மதரீதியான கண் ணோட்டத்தை புகுத்துவது ஆபத் தானது என்று முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி கூறியுள்ளார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ‘உயர்கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்’ என்ற தலைப்பிலான தேசிய கருத் தரங்கை சென்னையில் நடத்தின. இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்து மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி பேசியதாவது:
ஏழ்மையும், சாதிய படிநிலை களும் கொண்ட நம் சமுதாயத்தில் கல்வியென்பது இலவசமாக இருந்தால்தான் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்பெற முடியும். தற்போது உயர்கல்வியில் மத ரீதியான கண்ணோட்டத்தை புகுத்தும் வேலையும் வேகமாக செய்து நடைபெற்று வருகிறது. இது வரலாற்றில் ஆபத்தான போக்காகும். இதனை சமூக அக்கறைமிக்க அனைவரும் ஒன் றிணைந்து கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கருத்தரங்கில் சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஆர்.ராமானுஜம், கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில்சட்கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி,லயோலா கல்வியியல் கல்லூரி செயலாளர் டோமினிக் ரோயஸ், முனைவர் பி.ரத்தினசபாபதி, முனைவர் நா.மணி, ஐ.பி.கனகசுந்தரம், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியை மோகனா, பொருளாளர் கு.செந்தமிழ்ச் செல்வன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செய லாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக முனைவர் ஆர்.ராமானுஜம் மற்றும் பேராசிரியர் பொ.ராஜமாணிக்கம் எழுதிய ‘புதிய கல்விக் கொள்கை: விளக்கமும் விமர்சனமும்’ எனும் நூலை மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வெளியிட, அறிவியல் இயக்கச் செயலாளர் ஜி.முனுசாமி பெற்றுக் கொண்டார்.